இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடுகால் - செங்கை ஆழியான்.

 அருளம்பலத்தார் இடிந்தே போய்விட்டார். வெளிவிறாந்தையில் இடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி தூரத்தே அடிவளவில் தெரியும் கிணற்றையும் கண்முன்னால் கூட்டித்துப்புரவாக்கி வெளிப்படலை வரை விரிந்து கிடந்த முற்றத்தையும் அடங்கா கவலையோடு பார்த்தபடி நிலைக்குத்தியிருந்தார். எல்லாம் முடிந்துவிட்டன.  மாமா என்றழைத்தபடி மருமகள் உள்ளிருந்து வந்தாள். "இந்தாங்கோ தேத்தண்ணி வந்ததில இருந்து எதுவுமே வாய் நனைக்கவில்லை. இந்த அற்ப விடயத்திற்கு போய் இப்பிடி இடிந்து போயிட்டியள். அவர் இந்த வீட்டையும் இடித்துவிட்டு மொடர்னா ஒரு அப்பஸ்ரயர் கட்டப்படம் போட்டிருக்கிறார் மாமா". அவரின் இதயத்தில் சன்னம் பாய்ந்த மாதிரியான உணர்வு. "இதுக்காகவா பிள்ளை என்னை கனடாவுக்கு அனுப்பி வைச்சியள்?" "என்ன மாமா கதைக்கிறியள்?. உங்கள் கடைசி மகன் தம்பிராசா உங்களை வந்து அங்க ஒரு மாதம் தங்களுடன் இருக்குமாறு வற்புறுத்தினதால போனியள்" இப்ப நாங்கள் வற்புறுத்தி அனுப்பின மாதிரி குற்றம் சொல்லுறியள் மாமா" "ஒரு மாதம் தான் அங்க இருந்தன் அதுக்குள்ள இவ்வளவும் செய்திட்டியள்" என்றார் விரக்தியோடு.  ...